சுடச்சுட

  

  ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்றம் செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு

  By ராமநாதபுரம்  |   Published on : 05th July 2016 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பார்த்திபனூரில் ஷேர் ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனிடம் நெல்மடூர் கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    பார்த்திபனூர் அருகேயுள்ள நெல்மடூர் கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பது: பார்த்திபனூரிலிருந்து கமுதி செல்லும் அருப்புக்கோட்டை வழித்தடத்தில் ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இங்குள்ள ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மாணவிகளையும், பெண்களையும் சில ஆட்டோ ஓட்டுநர்கள் தவறாகப் பேசி வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே ஷேர் ஆட்டோ நிறுதத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என முனியசாமி என்பவர் தலைமையில் அக்கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai