சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, உப்பூர் அருகேயுள்ள எ.மணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (35). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு உப்பூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த கடலோரக் காவல் படையினர் அவரை விசாரித்துள்ளனர். பின்னர் அவரை சோதனையிட்டதில், அவர் தடை செய்யப்பட்ட 10 கிலோ கடல் குதிரை வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸார், அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai