Enable Javscript for better performance
குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு பேருந்து வசதி செய்து தரக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு பேருந்து வசதி செய்து தரக் கோரிக்கை

    By ராமநாதபுரம்  |   Published on : 05th July 2016 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் அருகே பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

         ராமநாதபுரம் சத்யா நகர் பகுதியில் அரசு புறம்போக்கில் குடியிருந்தவர்கள் நகருக்கு அருகே பட்டினம்காத்தான் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

      இக்குடியிருப்பிலிருந்து கூலிவேலைக்கு செல்லும் ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பேருந்து வசதியில்லை. சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

         இரவு நேரங்களில் தெரு விளக்கு வசதியும் இல்லை. எனவே இப்பகுதிக்கு உடனடியாக பேருந்து வசதி செய்து தர வேண்டும். கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள பாலத்தில் தெரு விளக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், குடியிருப்பில் வசிப்பவர்களுக்காக தனியாக ரேஷன்கடை அமைக்குமாறும், குடிநீர் வசதி செய்து கொடுக்குமாறும் ஆட்சியரிடம் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.கண்ணகி தலைமையில் அப்பகுதி பெண்கள் மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai