சுடச்சுட

  

  "ஜூலை 15க்குள் வாழ்வுச் சான்றிதழ் வழங்காதவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும்'

  By ராமநாதபுரம்  |   Published on : 05th July 2016 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் மாவட்ட கருவூல அலுவலகத்துக்கு வாழ்வுச்சான்றிதழ் அளிக்கவில்லையெனில் ஆகஸ்ட் முதல் அவர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  அவரது செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டக் கருவூலம், சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான நேர்காணல் ஏப்ரல் மாதம் முதல் நடந்து வருகிறது. வேலைநாள்களில் நேர்காணலுக்கு வரும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியப் புத்தகம், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியதாரர்களாக இருந்தால் மறுமணம், திருமணம் எதுவும் செய்யவில்லை என்பதற்கான உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

  நேரில் வர இயலாத நிலையில் உள்ள ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றுக்கான படிவத்துடன் மேற்சொன்ன ஆவணங்களின் நகலினை இணைத்தும் அனுப்பலாம்.  வரும் 15 ஆம் தேதிக்குள் நேர்காணல் அல்லது வாழ்வுச்சான்றிதழ் அனுப்பாதவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai