சுடச்சுட

    

    தொண்டி கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

    By திருவாடானை  |   Published on : 05th July 2016 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகா தொண்டி கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    திருவாடானை தாலுகா தொண்டியில் பாண்டியர் காலத்தில் துறைமுகம் இருந்துள்ளது. இங்கிருந்து இலங்கை, இந்தோனேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

     அந்த கால கட்டத்தில் தொண்டி பெரும் நகரமாகவும்,  கடற்கரை துறைமுகம் மற்றும் பொழுது போக்கும் இடமாகும் திகழ்ந்துள்ளது.

    வரலாற்று புத்தகங்களில் இதைப் படித்துவிட்டு தொண்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையின் தற்போதைய நிலையைப் பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

    இந்த கடற்கரையின் ஓரம் அழகிய தேவாலயமும் உள்ளது. அமைதியான கடற்கரை தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி சீரழிகிறது. கழிவு நீர் கடற்கரை வழியே சென்று கடலில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மதுபானம் அருந்தும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் கடற்கரை மாறி வருகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன் கடற்கரையை சுற்றுலாத் தலமாக மாற்றுவதாக தொண்டி பேருராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இது வரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

    எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடற்கரைப் பகுதியை சுத்தப்படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai