சுடச்சுட

    

    இந்திய - இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் பகுதியை சேர்ந்த சிறுவன் உள்பட 6 பேரை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த எட்வின் என்பவரது நாட்டுப் படகில் அப்பகுதியை சேர்ந்த விஜய், டொனால்ட், வினோத், அகிலன், கவிஸ்டன், நெட்னோ(15) ஆகிய 6 மீனவர்கள் சனிக்கிழமை தங்குகடல் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடல் பகுதியில் ஒரு வாரம் தங்கி மீன்களை பிடித்துக்கொண்டு கரைக்கு திரும்புவது வழக்கம்.

    இவர்கள் நெடுந்தீவுக்கும், கச்சத்தீவுக்கும் இடையே திங்கள்கிழமை மாலையில் மீன்பிடித்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகிலிருந்த சிறுவன் நெட்னோ உள்பட 6 பேரையும் கைது செய்தனர். கல்பிட்டி  கடற்படை முகாமில் அவர்களிடம் விசாரணை நடத்தியபிறகு புத்தளம் பகுதியிலுள்ள கடல்தொழில் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அங்கு அதிகாரிகள் மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai