சுடச்சுட

    

    ராமநாதபுரம் டி.பிளாக் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை ஆட்டோ மோதியதில் பைக்கில் சென்ற பெண் காவலர் காயமடைந்தார்.

       ராமநாதபுரம் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வருபவர் கதிரேசன் மகள் சாலினி(24) இவரும் இவரது தங்கை சுதாவும் இருசக்கர வாகனத்தில் டி.பிளாஸ் பேருந்து நிறுத்தம் வழியே சென்றனர்.

        அப்போது எதிரில் வந்த ஆட்டோ இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாலினி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கருப்புசாமி கைது செய்யப்பட்டு காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai