சுடச்சுட

    

    ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் ஜூலை 10-இல் முப்பெரும் விழா

    By ராமநாதபுரம்  |   Published on : 05th July 2016 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மருத்துவர் நாள் விழா, கல்வி எழுச்சி நாள் விழா, தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

       ராமநாதபுரம் அரவிந்த அரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவிற்கு இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர்.தி. அரவிந்தராஜ் தலைமை வகிக்கிறார். ஷிபான் நூர் குளோபல் அகாதெமி பள்ளி நிர்வாக இயக்குநர் மருத்துவர் ஐ.மன்சூர் முன்னிலை வகிக்கிறார்.விழாவை அறிமுகம் செய்து வைத்து சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பரணிக்குமார் பேசுகிறார்.  விழாவில் கம்பனில் இருசொல் என்ற தலைப்பில் டாக்டர். ஆர். குலசேகரனும், தமிழே மருந்து என்ற தலைப்பில் கண் மருத்துவர் பொ.சந்திரசேகரனும் பேசுகின்றனர்.

     வானகம் இங்கு என்ற தலைப்பில் மருத்துவர் ஜோசப்ராஜனும், இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்ற தலைப்பில் நரம்பியல் மருத்துவர் சகுபர்சாதிக்கும் பேசுகின்றனர்.

      பார்வையாளர்களின் மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் பதிலளிக்கவுள்ளனர். மாவட்ட அளவில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசும் வழங்கப்படவுள்ளது. தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மை.அப்துல்சலாம் நன்றி கூறுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai