சுடச்சுட

  

  வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி

  By ராமநாதபுரம்  |   Published on : 05th July 2016 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட நபர்களான அரசானூர் கிராமத்தை சேர்ந்தவர்களான கோபால், தென்னரசு மற்றும் சாந்தி ஆகிய 3 பேருக்கும் தீருதவித் தொகையாக தலா ரூ.1.25 லட்சத்துக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் திங்கள்கிழமை வழங்கினார்.

  ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எம்.முருகசெல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சீ.மகேசுவரன் உள்பட அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai