சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் நீதிமன்றத்தில ஆஜராகாத இலங்கை அகதிகள் இருவர் கைது

    By திருவாடானை  |   Published on : 06th July 2016 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகா ஓரியூரில் கடந்த ஆண்டு போலீஸாரல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த இலங்கை அகதிகளில் இருவர் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்து வந்துள்ளனர்.அவர்களை நீதிமன்ற உத்தரவுபடி போலீஸார் கைது செய்தனர்.

      திருவாடானை தாலுகா ஓரியூரில் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 8.8.2015அன்று சந்தேகத்திற்குரிய வகையில் சிலர் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கியூ பிரிவு போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். இதில், ஆஸ்திரேலியாவிற்கு கடல் மார்க்கமாக தப்பி செல்ல வந்துள்ள கோவை அகதிகள் முகாமை சேர்ந்த 11 பேரை கைது செய்து திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

      இந்த வழக்கு 21.6.2016இல் விசாரணைக்கு வந்த போது 11 பேரில், சிவராஜா(31), சிவக்குமார் என்ற யோவான்(35)இருவரும் ஆஜராகவில்லையாம்.

      இதையடுத்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருவடானை நீதிபதி கிருஷ்டல்பிபதா உத்தரவிட்டார். அதன் பேரில் ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸார் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்டல்பபிதா இருவரையும் 15நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai