சுடச்சுட

  

  நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம்: அரசாணையை ஆட்சியர் வழங்கினார்

  By ராமநாதபுரம்  |   Published on : 06th July 2016 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரத்தில் நலிந்த கலைஞர்கள் 12 பேருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்குவதற்கான அரசு ஆணையை ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தவில் கலைஞர்கள் பி.முனியசாமி (எமனேசுவரம்), கோ.அழகு (எமனேசுவரம்), பு.கணேசன்(மேலப்பார்த்திபனூர்) முனியாண்டி(காந்தி காலனி) இசை நாடக் கலைஞர்கள் ரா.கருப்பையா (ஆப்பனூர்), க.ராமுத்தேவர் (இடைச்சியூரணி) சொ.சுப்பிரமணியன்(மஞ்சூர்)வி.நந்தகுமார் (இடைச்சியூரணி), ஓவியக்கலைஞர்.என்.கற்பூர சுந்தரம்(பரமக்குடி), நாதசுவரக் கலைஞர்கள் ப.ஏசையா(எமனேசுவரம்), பி.ஜோசப்(எமனேசுவரம்)உள்ளிட்ட 12 பேருக்கு மாதந்தோறும் ஓய்வூதியத் தொகையான ரூ.1500 வீதம் 3 மாதங்களுக்குரிய தொகைக்கான காசோலையையும், அரசாணையையும் ஆட்சியர் எஸ்.நடராஜன் வழங்கினார்.

  இந்நிகழ்ச்சியில் சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் முருகசெல்வி உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai