Enable Javscript for better performance
பாம்பன் மீனவர்கள் 6 பேருக்கு ஜூலை 11 வரை சிறைக்காவல்- Dinamani

சுடச்சுட

    

    பாம்பன் மீனவர்கள் 6 பேருக்கு ஜூலை 11 வரை சிறைக்காவல்

    By ராமேசுவரம்  |   Published on : 06th July 2016 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 6 பேரையும் ஜூலை 11ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம்,  பாம்பன் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற விஜய்,டொனால்ட்,வினோத்,அகிலன்,கவிஸ்டன்,நெட்னோ ஆகிய 6பேரையும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் திங்கள்கிழமை மாலை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர், அவர்களை புத்தளம் பகுதியிலுள்ள கடல்தொழில் மற்றும் நீரியியல் வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அங்கு அதிகாரிகள் மீனவர்களை விசாரணை செய்து கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

    அங்கு போலீஸார் மீனவர்கள் மீது எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்குப் பதிந்து புத்தளம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர் படுத்தினர்.

    மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி ஜூலை 11 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, 6 மீனவர்களில் சிறுவன் நெட்னோவை(15)  அப்பகுதியிலுள்ள காப்பாகத்திலும், மற்ற 5 பேரையும் நீர்க்கொழும்பு சிறையிலும் போலீஸார் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai