Enable Javscript for better performance
ராமநாதபுரம், திருவாடானையில் பெண்களிடம் தாலிச் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம், திருவாடானையில் பெண்களிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

    By ராமநாதபுரம்  |   Published on : 06th July 2016 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம், திருவாடானையில் பெண்களிடம் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

        ராமநாதபுரம் அருகே காட்டூரணியைச் சேர்ந்தவர் சேதுகுமாரின் மனைவி நந்தினி(27)தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், காட்டூரணியிலிருந்து பழங்குளம் செல்லும் சாலையில் உள்ள நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் நந்தினி அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து நந்தினி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சீனிவாசன் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்.

     திருவாடானை அருகே கோவிந்தமங்கலத்தில் வசிக்கும் கருப்பன் மகள் மினர்வாதேவி(30)

    இவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த ஆறரைப் பவுன் தாலிச் சங்கிலியை அடையாளம் தெரியாத இருவர் பறித்து சென்றனராம். இதுதொடர்பாக அவர் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சார்பு- ஆய்வாளர் முத்துச்சாமி வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai