சுடச்சுட

  

  ராமர் பாதம் கோயிலுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

  By ராமேசுவரம்  |   Published on : 06th July 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரத்திலுள்ள ராமர் பாதம் கோயிலுக்குச் செல்லும் சாலையின் பல்வேறு இடங்கள் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளதால், அதைச் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள், ராமேசுவரம் கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள கெந்தமாதனபர்வதம் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயிலின் உபகோயிலான ராமர் பாதம் கோயிலுக்குச் செல்கின்றனர்.

    இப்பகுதியிலேயே மிக உயரமான மணல் மேட்டில் அமைந்துள்ள இந்த கோயிலில் இருந்து தொலைநோக்கிக் கருவி மூலம் ராமேசுவரம் தீவு பகுதியை முழுவதும் பார்க்க முடியும் என்பதால், இக்கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். ஆனால், ராமேசுவரம் திட்டக்குடி பகுதியிலிருந்து ராமர் பாதம் கோயிலுக்குச் செல்லும் சாலை  மிகவும் மோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து சாலையெங்கும் தண்ணீர் தேங்கி, பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

     இதனால், இச்சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதடைவதுடன், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கும் நிலை நீடிக்கிறது. எனவே, இச் சாலையை சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai