சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் மீனவர்களின் குடிசைகளில் திடீர் தீ

    By ராமேசுவரம்  |   Published on : 06th July 2016 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் துறைமுகப்பகுதியில் மீனவர்களின் குடிசைகள் மற்றும் மீன் நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

      ராமேசுவரம் கடலோரப் பகுதி அருகே துறைமுகம், அந்தோணியார் கோவில், தெற்கு கரையூர் ஆகிய பகுதிகளில் மீனவர்களின் குடிசைகள், மீன் நிறுவனங்கள் உள்ளன. இதில் துறைமுகப்பகுதியில் சில மீன் குடிசைகள் மற்றும் மீன் நிறுவனங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த ராமேசுவரம் பகுதி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

     காற்று பலமாக வீசியதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில், ராமேசுவரம், தங்கச்சிமடம்  ஆகிய பகுதிகளை சேர்ந்த  பாலசுப்பிரமணியன், பிளவிஸ், சேகர், லூஸ்லிஸ், திவாகர்,தில்லை, பெருமாள், சக்திவேல், முனிச்செல்வம் உள்பட 12 மீனவர்களின் குடிசைகளும், மீன் நிறுவனங்களில் இருந்த மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமானது.

    புகாரின் பேரில் ராமேசுவரம் துறைமுக காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai