சுடச்சுட

    

    ராமேசுவரம் தீவு பகுதியில் கடத்தலை தடுக்க டோல்கேட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை

    By ராமேசுவரம்  |   Published on : 06th July 2016 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் தீவுப் பகுதியில் கடத்தல் உள்பட பல்வேறு குற்றங்களை தடுக்க மண்டபம், ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வரும் டோல்கேட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      ராமேசுவரம் பகுதியிலிருந்து படகுகள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், கடல்அட்டை போன்ற கடத்தல் பொருள்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல்காரர்கள் கடத்தி  செல்கின்றனர்.  இந்த மாதிரியான பொருள்களை வெளியூர்களிலிருந்து வாகனம் மூலம் கொண்டு வந்து கடலோரப் பகுதியில் பதுக்கி வைத்து கடத்தி செல்கின்றனர்.

      அதுபோல இலங்கைக்கு மர்ம நபர்களும் ராமேசுவரம் கடலோரப்பகுதி வழியாக தப்பி செல்கின்றனர்.

     இதனை தடுப்பதற்கும், பாதுகாப்பு கருதி ராமேசுவரம் நகராட்சி சார்பில் சத்யா நகர் பகுதியிலும், அதுபோல, என்.ஹச் சார்பில் மண்டபம் காந்தி நகர் அருகாமையிலும் செயல்பட்டு வரும் டோல்கேட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai