சுடச்சுட

    

    மாமனார் வீட்டுக்குச் சென்ற கணவரைக் காணவில்லையென அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

    ராமநாதபுரம் வசந்த நகரைச் சேர்ந்த சின்னாண்டி மகன் வருபவர் ஞானக்குமார் (23). கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே முத்துப்பேட்டை சேதுநகரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றாராம். அதன் பின்னர் அவர் காணாமல் போனார். இதுகுறித்து அவரது மனைவி கௌதமி, திருப்புல்லாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்டு பிரைட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai