சுடச்சுட

    

    கீழக்கரை வட்டாரத்தில் உள்ள பனையடியேந்தல், எக்ககுடி ஆகிய கிராமங்களுக்கான கிராம உதவியாளர் பணிக்கு இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கீழக்கரை வட்டாட்சியர் என்.தர்மன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாரத்தில் பனையடியேந்தல், எக்ககுடி ஆகிய கிராமங்களுக்கான கிராம உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்கள் அடங்கிய பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மூப்பு பட்டியல் மூலம் பெறப்பட்டுள்ளது.  இதில் பொதுப்பிரிவினரில் முன்னுரிமை பெற்றவர்- பனையடியேந்தல் கிராமத்திற்கும், அருந்ததியினரில் முன்னுரிமை பெற்றவர்களில் ஆதரவற்ற விதவை- எக்ககுடி கிராமத்திற்கும் தேர்வு செய்யப்படவுள்ளனர். 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, எழுதப்படிக்க தெரிந்ததவராகவும், சைக்கிள் ஓட்டத் தெரிந்தவராகவும், அதே கிராமத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். எனவே, மேற்படி அனைத்து தகுதியும் உள்ளவர்கள் இம்மாதம் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மனுக்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் தபாலிலோ அல்லது நேரிடையாகவோ கிடைக்கும்படி அனுப்பலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai