சுடச்சுட

  

  திருப்புல்லாணி சேதுக்கரையில் சுற்றுலாத் துறை மூலம் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை

  By ராமநாதபுரம்  |   Published on : 07th July 2016 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சேதுக்கரையில் சுற்றுலாத் துறை மூலம் உயர்மட்ட கோபுர விளக்கு, கழிப்பறைகள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.

  திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் அரசின் வளர்ச்சித் திட்டப்பணிகளை புதன்கிழமை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோரைக்குட்டம் கிராமத்தில் ரூ.1.82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் கட்டும் பணி, திருப்புல்லாணியில் ரூ.14.55 லட்சம் மதிப்பில் ஊராட்சி சேவை மையம் கட்டும் பணி மற்றும் ரூ.22.16 லட்சம் மதிப்பில் பள்ளிக் கட்டடம் கட்டும் பணிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

   திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மங்களேசுவர் கிராமம், குதக்கோட்டை ஆகிய கிராமங்களில் ரூ.75 ஆயிரம் மதிப்பில் பயனாளிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு குடில்களை பார்வையிட்டு உற்பத்தி, விறபனை செய்யும் விதம் ஆகியன குறித்தும் ஆட்சியர் கேட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

  திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரையில் சுற்றுலாத்துறையின் மூலமாக உயர்மட்ட கோபுர விளக்கு, கழிப்பறைகள், பெண்கள் உடை மாற்றும் அறைகள் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai