சுடச்சுட

  

  நுகர்பொருள் வாணிபக் கிடங்கு: சுமை தூக்கும் தொழிலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

  By ராமநாதபுரம்  |   Published on : 07th July 2016 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் 15 பேர் புதிதாக நியமிக்கப்பட இருப்பதால், விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

   தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ராமநாதபுரம் கிடங்கிற்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் 15 நபர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். எனவே சுமைதூக்கும் பணி அனுபவமும், தகுந்த உடல்திறன் மற்றும் 21 வயதுக்கு மேல் 35 வயதிற்குள் உள்ள நபர்கள், இந்த பணிக்கு வர விரும்பினால் தங்களது குடும்ப அட்டை, புகைப்படம் - 2 (ல்ஹள்ள்ல்ர்ழ்ற் ள்ண்க்ஷ்ங் ல்ட்ர்ற்ர்), வாக்காளர் அடையாள அட்டை மற்றும் நல்ல உடல்திறன் உள்ளமைக்கான மருத்துவச்சான்று ஆகியவற்றை இணைத்து மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai