சுடச்சுட

    

    பரமக்குடி நகர் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் எஸ்.முத்தையா புதன்கிழமை பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

     பரமக்குடி மாதவன் நகர் பகுதியில் தொடங்கி நகரின் பல்வேறு பகுதிகளில் அவர் குறைகளைக் கேட்டார். பெரும்பாலான இடங்களில் வாருகால் முறையாக பராமரிக்காமல், கொசுக்கள் அதிகரித்து வருவதாகவும், குடிநீர் போதிய அளவு வருவதில்லை என்றும், பல இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் புகார் தெரிவித்தனர்.  பொதுமக்களின் இப்புகார்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்வதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உடனே சரிசெய்ய அறிவுறுத்துவேன் என வாக்குறுதி அளித்தார்.

     அவருடன் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் எம்.கே.ஜமால், பொதுக்குழு உறுப்பினர் எம்.நாகராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் கே.அப்துல்மாலிக், வீட்டுவசதி சங்க தலைவர் திசைநாதன், அவைத் தலைவர் நயினார்முகமது, நகர்மன்ற உறுப்பினர் மணிவாசகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai