சுடச்சுட

    

    பரமக்குடி இளைஞர் துபையில் மர்மச் சாவு: ஆட்சியரிடம் மனைவி புகார்

    By ராமநாதபுரம்  |   Published on : 07th July 2016 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துபையில் தனது கணவர் மர்மமான முறையில் இறந்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பரமக்குடி இளைஞரின் மனைவி, ராமநாதபுரம் ஆட்சியரிடம் புதன்கிழமை புகார் அளித்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வெங்கிட்டங்குறிச்சி அருகேயுள்ள கணக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த அழகர்சாமியின் மனைவி அ.ராதா (30). இவர் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது.

    எனது கணவர் அழகர்சாமி துபையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். எங்களுக்கு 3 மகன்கள் இருந்தனர். இதில் இரண்டாவது மகன் பிரவீன் (10) கடந்த மே 11 இல் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

    மகன் இறப்பிற்கு வந்த எனது கணவர் மீண்டும் துபைக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் புதன்கிழமை அவர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.அவர் திடீரென இறந்திருப்பதால் அவரது சாவில் மர்மம் உள்ளது.

     எனவே தக்க விசாரணை செய்வதுடன், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai