சுடச்சுட

    

    பரமக்குடி நகராட்சியில் பணிகளை குறைகூறும் பொதுமக்களை ஒப்பந்ததாரர்கள் மிரட்டுவதாகப் புகார்

    By பரமக்குடி  |   Published on : 07th July 2016 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்கும் பொதுமக்களை ஒப்பந்ததாரர்கள் மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

     பரமக்குடி நகராட்சி பகுதியில் ரூ. 8 கோடி செலவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி சுகாதார வளாகம் அமைக்கும் பணி, நகராட்சி பள்ளி கட்டடங்கள் கட்டும் பணி, வாருகால், குடிநீர் இணைப்பு மற்றும் ஆழ்குழாய் பதிக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

     இப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்துவதாகவும், பேவர் பிளாக் சாலைப் பணிகளில் பல இடங்களில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டும், முழுமையாக சாலைப் பணிகளை முடிக்காமல் உள்ளதாகவும்,வாருகால் மற்றும் கட்டுமானப் பணிகளில் போதிய சிமெண்ட் சேர்க்காததால், பணி முடிந்த சில தினங்களிலேயே உடைந்து விழுவதாகவும் அந்தந்த பகுதி மக்கள் நகராட்சி ஆணையாளர், பொறியாளர் மற்றும் நகரமைப்பு அலுவலர்களுக்கு புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதுபோன்ற புகார்கள் வரும் பகுதிக்கு நகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொள்ளும்போது, அதிகாரிகள் முன்னிலையிலேயே புகார் தெரிவிக்கும் பொதுமக்களை ஒப்பந்ததாரர்கள் அவதூறாகப் பேசுவதாகவும்,   எங்களை யார் என்ன செய்யமுடியும் எனக்கூறி மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

     எனவே பரமக்குடி நகராட்சி நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai