Enable Javscript for better performance
ராமநாதபுரம் வங்கிக் கிளையில் 1800 பேருக்கு சுயதொழில் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் வங்கிக் கிளையில் 1800 பேருக்கு சுயதொழில் பயிற்சி

    By ராமநாதபுரம்  |   Published on : 07th July 2016 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ராமநாதபுரம் கிளை கடந்த 4 ஆண்டுகளில் 1800 பேருக்கு சுயதொழில் பயிற்சி வழங்கியுள்ளதாக வங்கியின் தூத்துக்குடி மண்டல முதன்மை மேலாளர் பி.உமாமகேசுவரி தெரிவித்தார்.

     ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய சாதனை மலர் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சாதனை மலரை ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்டார். இதில், வங்கியின் தூத்துக்குடி மண்டல முதன்மை மேலாளர் பி.உமா மகேசுவரி பேசியது: பின்தங்கிய மாவட்டமாக இருந்து வரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 17 வகையான சுயதொழில் பயிற்சிகளை 1800 பேருக்கு வழங்கி சாதனை புரிந்துள்ளோம். பயிற்சி பெற்றவர்களில் 992 பேர் சொந்தமாக தொழில் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

     நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ்பாபு, ராமநாதபுரம் ஐ.ஓ.பி. கிளை முதன்மை மேலாளர் குணசேகரன், கிராமிய பயிற்சி மைய இயக்குநர் சியாமளாநாதன் ஆகியோர் உள்பட வங்கி மேலாளர்கள், மாவட்ட தொழில்மைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai