Enable Javscript for better performance
வீடு புகுந்து திருட முயன்ற இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவாடானை அருகே நெய்வயல் காலனியைச் சேர்ந்தவர் ஞானசெளந்தரி (30). இவரது வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார் (19) புகுந்து திருட முயன்றாராம். சத்தம் கேட்டு ஞானசெளந்தரி சென்று பார்த்த போது அஜித்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாராம்.

    இதுகுறித்து ஞானசெளந்தரி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து அஜித்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai