Enable Javscript for better performance
6 மீனவர்களை விடுவிக்கக் கோரி  பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    6 மீனவர்களை விடுவிக்கக் கோரி  பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

    By ராமேசுவரம்  |   Published on : 07th July 2016 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கைச் சிறையிலிருக்கும் பாம்பன் நாட்டுப் படகு  மீனவர்கள் 6 பேரை விடுவிக்கக் கோரி மீனவர்கள் புதன்கிழமை கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

     பாம்பன் துறைமுக கடலோரப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பாம்பன் நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன் தலைமை வகித்தார்.   ராமநாதபுரம் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. மீனவர் சங்கச் செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மீனவப் பெண்கள் உள்பட மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி, கடலில் இறங்கி நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாட்டு படகையும், சிறையிலுள்ள 6 மீனவர்களையும் விடுவிக்கக் கோரியும், இந்திய கடலோரப் பகுதியில் அச்சமின்றியும், சுதந்திரமாகவும்  மீன்பிடிக்க  மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் இதில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பாம்பன் பகுதி நாட்டுப் படகு மீனவ சங்கப் பிரதிநிதிகளும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும், மீனவர்களும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai