சுடச்சுட

    

    இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் கைது

    By ராமேசுவரம்  |   Published on : 08th July 2016 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். 

       ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன்கிழமை காலையில் கெரின், ஜெயபால் ஆகியோரது படகுகளில் கெரின், ஜான்பாய், தேவராஜ், சதீஷ், ஸ்ரீதர், தெய்வேந்திரன், உமையக்குமார், முருகன், நாகு, பாலு, பாபு ஆகிய 11 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். தலைமன்னார் கடல் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் மீன்பிடித்துகொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 11 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். தலைமன்னார் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள், பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை ஜூலை 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், மீனவர்கள் அனைவரும் வுவனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

      அதேபோல்,  ராமேசுவரம் பகுதியிலிருந்து  எமர்சன் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற எமர்சன், நாகராஜன், நம்புச்செல்வம், சேகர், சுந்தர் ஆகிய 5 மீனவர்களை நெடுந்தீவு கடலோரப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலையில் கைது செய்தனர். பின்னர் நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்து பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூலை 20 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் 5 மீனவர்களும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai