Enable Javscript for better performance
தார்சாலை உயர்ந்ததால் இருபுறமும் 1 அடி பள்ளம்: ராமநாதபுரம் பிரதான சாலைகளில் நடைமேடை அமைக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    தார்சாலை உயர்ந்ததால் இருபுறமும் 1 அடி பள்ளம்: ராமநாதபுரம் பிரதான சாலைகளில் நடைமேடை அமைக்கப்படுமா?

    By ராமநாதபுரம்  |   Published on : 08th July 2016 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் நகரில் புதிதாக போடப்பட்ட பிரதான சாலைகள் உயர்ந்து இருப்பதால், பாதசாரிகளின் நலன் கருதி சாலையோரங்களில் நடைமேடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

      ராமநாதபுரம் நகரில் சாலைத்தெரு, சிகில்ராஜவீதி, வண்டிக்காரத் தெரு ஆகியன பிரதான சாலைகளாகும். இப்பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார் சாலைகள் உயரமாக இருப்பதால், சாலையின் இருபுறமும் ஒரு அடிக்கு மேல் பள்ளமாக உள்ளது. எனவே மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே புதிதாக தார்ச்சாலை போடப்பட்ட பகுதிகளில் பாதசாரிகளின் நலன் கருதி உடனடியாக மழைக்காலத்திற்குள் நடைமேடை மற்றும் மழைநீர் வடிகால் வசதி ஆகியன அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

     இது குறித்து ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தின் செயலாளர் பா.ஜெகதீசன் கூறியது:  ராமநாதபுரம் நகரில் பிரதான சாலைகளில் புதிதாக போடப்பட்ட தார் சாலையால் சாலையின் இருபுறமும் தேங்கும் தண்ணீர் வெளியேற நகராட்சி மூலம் நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். சாலையின் உயரம் உயர்ந்துள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும் பொழுது மின்வயரில் உரசி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அப்பகுதியில் செல்லும் மின்வயர்களை மின்வாரியம் மூலம் இரு அடிக்கு மேல் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

     ராமநாதபுரம் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.ராஜ்குமார் கூறியது: ராமநாதபுரம் நகரில் அருள்மிகு வழிவிடு முருகன் கோயிலில் இருந்து அரண்மனை வரையிலும், மத்திய மணிக்கூண்டு பகுதியிலிருந்து சர்ச் பேருந்து நிறுத்தம் வரையிலும், கேணிக்கரையிலிருந்து அரண்மனை வரை செல்லும் சிகில் ராஜ வீதி பகுதியிலும் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலைகள் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதால் பாதசாரிகளின் நலன் கருதி உடனடியாக நடைமேடை அமைக்க வேண்டும்.

     நடைபாதையில்லாமல் சாலைகள் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதால் பாதசாரிகள், வர்த்தகர்கள் பலரும் அவதிப்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai