சுடச்சுட

    

    தீ விபத்தில் நாசமான குடிசைகள்: மீனவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்

    By ராமேசுவரம்  |   Published on : 08th July 2016 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம்  துறைமுகப்பகுதியில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து நாசமான மீனவர்களின் குடிசைகள் மற்றும் மீன் நிறுவனங்களை தமிழக அமைச்சர் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

      ராமேசுவரம் துறைமுக கடலோரப்பகுதியில் ராமேசுவரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 14 மீனவர்களின் குடிசைகள் மற்றும் மீன் நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை தீயில் எரிந்து சேதமாகின. இதனையொட்டி பாதிக்கப்பட்ட மீனவர்களை தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்  வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தீயில் சேதமான பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சரிடம் குடிசைகளை இழந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் நிவாரணம் கோரி மனு அளித்தனர். மேலும் இலங்கைச் சிறையிலிருக்கும் மீனவர்களின குடும்பத்தினருக்கு தமிழக அரசு தினசரி வழங்கும் நிவாரணத் தொகையான ரூ. 250-ஐ தாமதம் இல்லாமல் வழங்கக் கோரியும், மீனவர்களையும், அவர்கள் சென்ற படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மீனவர்களின் குடும்பத்தினர்  மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர், கோரிக்கைகளை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் நகர் மன்றத்தலைவர் அர்ச்சுனன்,  துணைத்தலைவர் குணசேகரன், ராமேசுவரம் நகர்  ஜெயலலிதா பேரவை செயலாளர் கஜேந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பி.ஜி.சேகர், மின்சார பிரிவு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட அதிமுக நிர்வாகிகளும் மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai