Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபட்டவர்கள் விருது பெறலாம்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபட்டவர்கள் விருது பெறலாம்

    By ராமநாதபுரம்  |   Published on : 08th July 2016 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் அரசு விருதைப் பெற இம்மாதம் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

     இது தொடர்பாக வியாழக்கிழமை  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சேவை புரிந்த சமூகப் பணியாளர், மற்றும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விருதைப் பெற தகுதியுடையவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று ஜூலை 11 -க்குள் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai