சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

  By திருவாடானை  |   Published on : 08th July 2016 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

     நம்புதாளை, எஸ்.பி.பட்டினம், மங்களக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் பள்ளி வாசல்களிள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.தொண்டியில் பல்லாக்கு ஒலியுல்லா திடலில் ஐக்கிய ஜமாத் தலைவர் அபுபக்கர் தலைமையிலும், கபீர் சாதிக், தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா, தமுமக மாவட்டச் செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

     தொழுகை முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். நம்புதாளை மேற்கு தெரு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

  தொண்டியில்...திருவாடானை தாலுகா தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம், மங்களக்குடி, வெள்ளையபுரம் பகுதிகளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. தொண்டியில்  தமுமுக சார்பில் ஏழைகளுக்கு ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கும் நிகழ்ச்சி தமுமுக மாவட்ட செயலாளர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மமக துணை செயலாளர் அப்துல் அஜீஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், 500 குடும்பங்களுக்கு அரிசி, இறைச்சி, தேங்காய், காய்கறி, மசாலாப்பொருட்கள் என தலா ரூ.550 மதிப்புள்ள பொருள்களும், புத்தாடைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தொண்டி பள்ளித் தாளாளர் சாதிக் ஹாஜியார், எஸ்.எம்.பி.சுலைமான், மற்றும் நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai