சுடச்சுட

    

    வட்டாணம் அரசுப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடக்கம்

    By திருவாடானை  |   Published on : 08th July 2016 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானைத் தாலுகா வட்டாணம் அரசு உயர் நிலைப் பள்ளியில்  புதன்கிழமை தொண்மை பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது.

     இவ்விழாவில் ஆசிரியர் மிக்கேல்ராஜ் தலைமை வகித்தார். நமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தையும், அதில் மாணவர்களின் பங்கு பற்றியும் பொறுப்பு ஆசிரியர் சேவியர் பேசினார்.  திருப்புலாணி அரசு உயர் நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு, சங்க காலம் முதல் தொண்டியின் வரலாறு பற்றி சிறப்புரையாற்றினார். இதையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் பழம்பொருள்கள் கருப்பு வெள்ளை பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டு பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள்,குறியீடு உள்ள ஓடுகள், நெசவுத் தொழிலில் பயன் படுத்தும் தக்களி, பாண்டி ஆட்டத்திற்கு பயன்படுத்தும் சில்லுகள், இரும்பு தாதுக்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை மாணவர்கள் கண்டுகளித்தனர். ஏற்பாடுகளை மாணவர்கள் சுஜிதா, ஆனந்த், அய்யனார், ஹெப்சி மேத்யூ, அற்புதம், அப்துல், அஜீஸ், மிகண்டன், முகம்மது, அர்ஷத் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai