சுடச்சுட

    

    இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு காவல் நீட்டிப்பு

    By ராமேசுவரம்  |   Published on : 09th July 2016 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு இம்மாதம் 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.

     ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த ஜூன் 4 ஆம் தேதி பாஸ்கரன் என்பவருக்குச் சொந்தமான படகில் அப்துல்கரீம், முருகன், ஆரோக்கியம், அபுதாஹீர் ஆகிய நான்கு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 பேரையும் கைது செய்து ஊர்க்காவல் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அங்கு போலீஸார் மீனவர்கள் மீது வழக்குப் பதிந்து ஊர்க்காவல்துறை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, அவர்களை ஜூன் மாதம் 16 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் நான்கு மீனவர்களும்  யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இரு முறை மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் நான்காவது முறையாக வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களிடம் நீதிபதி சரோஜினி இளங்கோவன் விசாரணை நடத்தினார். மீனவர்கள் மீதான வழக்கு குறித்து போதுமான ஆவணங்களை இலங்கை கடற்படையினர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என்பதால் மீனவர்களின் வழக்கு இம்மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார். அதுவரை 4 மீனவர்களையும் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் 4 மீனவர்களையும் போலீஸார் யாழ்பாணம் சிறையில் மீண்டும் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai