சுடச்சுட

  

  பரமக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோயில் மஹாகும்பாபிஷேக விழா: யாக பூஜை தொடக்கம்

  By பரமக்குடி  |   Published on : 09th July 2016 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை யாக பூஜை தொடங்கியது.

   திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடந்த புதன்கிழமை அனுக்ஞையுடன் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

   இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் பிரசன்ன அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு வைகை ஆற்றிலிருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, வீதிஉலா வந்து யாக சாலையை அடைந்தன. மாலை 4.30 மணியளவில் முதல் கால யாக பூஜை  நடைபெற்றது.

   சனிக்கிழமை காலை, மாலையில் 2-ஆம், 3-ஆம் கால யாகசாலை பூஜைகளும், சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தனம் என்னும் மருந்து சாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

       ஜூலை 10-ம் தேதி காலை மாலை வேளைகளில் 4ஆம், 5ஆம் கால யாக பூஜைகள் நடைபெறும்.  ஜூலை 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணிக்கு 6 ஆம் கால யாகபூஜையும், அதிகாலை 5.15 மணிக்கு பரிவார மூர்த்திகள், விமானங்களுக்கு அபிஷேகமும் நடைபெறும்.

     இதனைத் தொடர்ந்து காலை 9.50 மணிக்கு பிரதான விமானம், ராஜகோபுரத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை சர்வசாதகம் மா.சிவகுமார் குருக்கள், மா.பாஸ்கர குருக்கள் அடங்கிய சிவாச்சாரியார்கள் நடத்தவுள்ளனர்.

   விழா ஏற்பாட்டினை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் மற்றும் ஸ்ரீ முத்தாலம்மன் தேவஸ்தானம் பரம்பரை டிரஸ்டிகள் மற்றும் ஆயிரவைசிய சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai