சுடச்சுட

  

  பாம்பனில் புதிய தூக்குப்பாலம்: தலைமைப் பொறியாளர் ஆய்வு

  By ராமேசுவரம்  |   Published on : 09th July 2016 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாம்பனில் புதிய தூக்குப்பாலம் அமைப்பது தொடர்பாக தென்னக ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் எஸ்.எஸ்.குப்தா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

     பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், பாலத்தில் சேதமடைந்த இரும்பு கர்டர்கள், தண்டவாளங்களை ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது சீரமைத்து வருகிறது. மேலும் தூக்குப்பாலத்தில் துருப்பிடித்த பகுதியை அகற்றி புதிய இரும்பு பட்டைகள் பொருத்துவது, ரசாயனம் கலந்த வர்ணம் பூசுவது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

   அடிக்கடி துருப்பிடித்து பலம் இழந்து வருவதால், தூக்குப் பாலத்தை மாற்றிவிட்டு மேல்நோக்கி மின் இயந்திரம் மூலம் தூக்கும் வகையில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய தூக்குப்பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

   இதனையொட்டி ஆய்வு செய்வதற்காக தென்னக ரயில்வே முதன்மை தலைமைப் பொறியாளர் எஸ்.எஸ்.குப்தா வெள்ளிக்கிழமை தனி ரயில் மூலம் ராமேசுவரம் வந்தார். அவர் கார் மூலம் பாம்பன் சாலைப்பாலம் பகுதிக்கு ரயில்வே பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்றார். அப்போது தூக்குபாலம் திறக்கப்பட்டது.

    அதை சாலைப் பாலத்திலிருந்தவாறு 30 நிமிடங்கள் குப்தா பார்வையிட்டார். பின்னர் பாம்பன் ரயில் பாலத்தில் பொருத்தப்பட உள்ள இரும்பு கர்டர்கள் குறித்தும், பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்தும், பாலத்தின்  தன்மை மற்றும் உறுதித் திறன் குறித்தும்  பாலப்பிரிவு பொறியாளர்கள் மற்றும் மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai