சுடச்சுட

  

  பாம்பன் மீனவர் வலையில்  1 டன் திருக்கை மீன்கள் சிக்கின

  By ராமேசுவரம்  |   Published on : 09th July 2016 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாம்பன் மீனவர் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை ஒரு டன்னுக்கு மேலாக திருக்கை மீன்கள் கிடைத்தன. 

    பாம்பன் பகுதியிலிருந்து வியாழக்கிழமை காலையில் 70-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க தென்கடல் பகுதிக்கு சென்றனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை காலையில் கரைக்குத் திரும்பினர்.  இதில், பலதரப்பட்ட  மீன்கள் இருந்தபோதும் திருக்கை மீன்கள் அதிக அளவில் பிடிபட்டிருந்தன. அதிலும் ஒரு மீனவர் படகில் 1 டன்னுக்கு மேலாக திருக்கை மீன்கள் கிடைத்திருந்தன. அவற்றை வியாபாரிகள் உணவுக்கு வெளிநாட்டிற்கு அனுப்புவதால் ஒரு கிலோ மீனை ரூ. 120 முதல்  ரூ. 160 வரை விலைக்கு வாங்கிச் சென்றனர். வழக்கத்தைவிட அதிகமான லாபம் கிடைத்ததால் திருக்கை மீன்களைப் பிடித்து வந்த மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai