சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் 17 பெட்டிக் கடைகளில் ரூ.1 லட்சம் போதைப்பொருள்கள் பறிமுதல்

    By ராமநாதபுரம்  |   Published on : 09th July 2016 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் 17 பெட்டிக் கடைகளில் இருந்து ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

      உணவுப் பாதுகாப்புத் துறையின் ராமநாதபுரம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஸ் சந்திர போஸ் தலைமையிலான குழுவினர் ராமநாதபுரம் நகரில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். இச்சோதனையில் 17 பெட்டிக் கடைகளில் இருந்து ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

      பெயரிடப்படாத இனிப்பு மற்றும் கிரீம் பிஸ்கட் வகைகள், புகையிலைப் பொருள்கள், போதையை தூண்டும் சாக்லேட் மிட்டாய்கள், செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட திண்பண்டங்கள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றை ஆட்சியர் எஸ்.நடராஜன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியது:

           பள்ளிகள்,கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் போதையை தூண்டும் மிட்டாய்கள், சாக்லேட்டுகள், நாக்கிற்கு அடியில் வைக்கும் புகையிலைப் பொருள்கள் போன்றவற்றை விற்பது சட்டப்படி குற்றமாகும். இவற்றை விற்பனை செய்யும் கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai