சுடச்சுட

  

  விபத்தில் சிக்கியவர்களை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதல்: 2 பேர் சாவு

  By ராமநாதபுரம்  |   Published on : 09th July 2016 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது சுற்றுலா வேன் மோதியது. இதில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது மற்றொரு லாரி மோதியது. இச்சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

   சேலம் சங்ககிரி பிரதான சாலை ஜலால்புரத்தைச் சேர்ந்த செய்யது அக்பர் மகன் சாகுல்ஹமீது (39). இவரது மனைவி வஷிதா பேகம் (30). இவர்களது குழந்தைகள் அர்ஜினா பேகம் (13),செய்யது ரிசான் (7), சாகுல்ஹமீதுவின் தந்தை செய்யது ஹூசேன் (70), தாய் ஜெகன்னாத பேகம் (60) ஆகியோர் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் சேலத்திலிருந்து ஏர்வாடிக்கு வேனில் சுற்றுலா வந்துள்ளனர். இந்த வேன் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வடவயல் கிராமம் அருகே சென்றபோது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 14 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் இரு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

  வரும் வழியிலேயே செய்யது ஹூசேன் உயிரிழந்தார். இதில் ஒரு ஆம்புலன்ஸ் தேவிபட்டினம் அருகே கழனிக்குடி பகுதியில் சென்ற போது எதிரில் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் வாகனம் நொறுங்கி சேதமடைந்தது.

     இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் மூதாட்டி சல்மான் நிஷா (70) உயிரிழந்தார். மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கரராஜ் மகன் பிரபாகரன் (30), டெக்னீசியனான ராமநாதபுரம் சக்கரக்கோட்டை சேதுநகரைச் சேர்ந்த நம்பு மகன் மைனர் (28) ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இருவரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு விபத்தில் சிக்கியவர்கள் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டபோது மற்றொரு விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

   இந்த விபத்துகள் தொடர்பாக திருப்பாலைக்குடி மற்றும் தேவிபட்டினம் போலீஸார் வழக்குகள் பதிவு செய்து விசாரிக்கின்றனர். தலைமறைவான இரு லாரிகளின் ஓட்டுநர்களையும் தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai