சுடச்சுட

    

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By ராமநாதபுரம்  |   Published on : 09th July 2016 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமாநாதபுரத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி  வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

      தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பி.தினகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் எம்.காசி, பி.பழனீஸ்வரன், துணைச் செயலாளர் எஸ்.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ஞானசேகரன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எம்.கணேசன், சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் பி.திருமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

           ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழக அரசு அறிவித்தபடி ஊதிய மாற்றத்தை உடனடியாக அனைவருக்கும் நடைமுறைப்படுத்திட வேண்டும், சரியான எடையில் கடைகளுக்கு பொருள்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், டிஜிட்டல் குடும்ப அட்டை வழங்கிட வேண்டும் என்பன உள்பட 10 அம்சக் கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai