சுடச்சுட

  

  திருவாடானை அருகே சீவலாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியம். அவரது மனைவி விக்டோரியா (25). இவர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த செபஸ்தியான் மகள் ராணி(35), ராசாத்தி (36) மற்றும் அரியப்புவயல் கிராமத்தைச் சேர்ந்த மோசஸ் மகன் ஜான் பீட்டர்(29) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை ராணி, ராசாத்தி, ஜான்பீட்டர் ஆகிய 3 பேரும் தன்னைத் தாக்கியதாக விக்டோரியா கொடுத்த புகாரின் பேரில், திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

   

  வீடு புகுந்து பணம் திருடிய 2பேர் கைது

  திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்களம் அருகே அழிந்திக் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் மகன் முருகன் (46). இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் புகுந்து பிரோவில் இருந்த ரூ.2000-ஐ திருடி சென்று விட்டனராம்.

  முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், அருகே உள்ள செங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோட்டை மகன் வினோத்குமார், அதே ஊரைச் சேர்ந்த முத்துமணி மகன் ராஜேஷ் கண்ணன் (28) ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது. 2 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

   

  திருவாடானை பகுதியில் குடி தண்ணீர் தட்டுப்பாடு

  திருவாடானை அருகே உள்ள பல கிராமங்களில் கடந்த இரண்டு நாள்களாக கடும் குடி தண்ணீர் தட்டுபாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

  கிழவண்டி, இந்திரா நகர், தொத்தார் கோட்டை போன்ற பல்வேறு கிராமங்களில் கடந்த இரு நாள்களாக குடிநீர் விநியோகிக்ப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பெண்கள் காலிக் குடங்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்திரா நகர் பகுதிக்குச் சென்று, அங்குள்ள தரைத்தள தண்ணீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்கின்றனராம்.

  இது பற்றி இப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் இரண்டு நாள்களாக வராததால் அவதிப்படுகிறோம். எனவே சம்பந்தபட்ட துறையினர் தலையிட்டு விரைவில் குடி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai