சுடச்சுட

    

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு

    By முதுகுளத்தூர்  |   Published on : 11th July 2016 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாயல்குடி அருகே நடந்து சென்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

      ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  பாண்டி மகன் மாரிமுத்து (30). இவர், கன்னிராஜபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மாரிமுத்து மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

      ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து, சாயல்குடி காவல் நிலையத்தில் அவரது தாயார் பேச்சியம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விபத்துக்குக் காரணமான வாகனத்தைத் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai