சுடச்சுட

    

    அரசு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் கூடுதல் பாடப் பிரிவுகளை கொண்டுவர கோரிக்கை

    By முதுகுளத்தூர்  |   Published on : 11th July 2016 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாயல்குடி அருகே டி.மாரீயூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் முதல் குரூப் மட்டுமே உள்ளதால், பிற பாடப் பிரிவுகளையும் ஏற்படுத்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    டி.மாரீயூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்புத் தேர்வில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், இப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் முதல் பாடப்பிரிவான கணிதம் மட்டுமே உள்ளது. அறிவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பிற பாடப் பிரிவுகள் இல்லாததால், மாணவர்கள் விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர முடியாமல், வெளியூர்களுக்குச் சென்று படிக்கும் சூழ்நிலை உள்ளது.

    எனவே மாணவர்களின் நலன் கருதி, இப்பள்ளியில் பிற பாடப் பிரிவுகளையும் விரைவில் கொண்டுவர கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என,  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai