சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் தீவிரம்

    By திருவாடானை  |   Published on : 11th July 2016 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை ஊராட்சி ஒன்றிய அளவில் மன்றத் தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்டக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான விருப்ப மனுக்கள் பெறுவதில், அதிமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.   20 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 2 மாவட்டக் கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளன. இதுவரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கட்சி அடிப்படையில் போட்டி கிடையாது. ஆனால், தற்போது ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்க விருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுகவினரிடம் விருப்ப மனுக்களை கட்சி நிர்வாகிகள் பெற்றுள்ளனர்.

    மேலும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மாவட்டக் கவுன்சிலர்கள் பதவிகளுக்கான விருப்ப மனுக்களையும் அதிமுக நிர்வாகிகள் வாங்கியுள்ளனர். தற்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருவதால், திருவாடானையில் இப்போதே தேர்தல் களை கட்டியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai