சுடச்சுட

    

    ராமேசுவரம் காட்டுப்பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் வேடராஜன். இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் புதிதாக வாங்கப்பட்ட சமையல்  எரிவாயு உருளையை அடுப்பில் மாற்றியுள்ளார். அப்போது உருளைலிருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டு உருளையில் மேல் பகுதியிலுள்ள ரெகுலட்டர் திடீரென தீப்பிடித்தது. இதையறிந்த வேடராஜன் எரிவாயு உருளையை வீட்டிற்கு வெளியில் தூக்கிப் போட்டார். பின்னர் ஈரத்துடன் கூடிய சணல் சாக்கு பையை உருளையில் போட்டு மூடிவிட்டு ராமேசுவரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் வந்து தீயணைப்பு வீரர்கள் வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai