சுடச்சுட

    

    சூறாவளிக் காற்றில் சிக்கி  நடுக்கடலில் படகு மூழ்கியது: மீனவர்கள் தப்பினர்

    By ராமேசுவரம்  |   Published on : 11th July 2016 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் பகுதி மீனவரின் படகு சூறாவளிக் காற்றில் சிக்கி நடுக்கடலில் மூழ்கியது. படகிலிருந்த 4 மீனவர்களையும் அருகாமையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை கரைக்கு அழைத்து வந்தனர்.

      மண்டபம் பகுதியிலிருந்து 400க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இதில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மணியரசு  படகில் ஜெயமணி, ஜெயக்குமார், தர்மராஜ், அஜித்குமார் ஆகியோர் கச்சத்தீவு அருகே மாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சூறாவளி வீசியுள்ளது. இதில் இவர்களின் படகு சிக்கி கடலில் மூழ்கியது. படகிலிருந்த நான்கு பேரும் படகிலிருந்து ஐஸ்பெட்டி, டீசல் கேன் உள்ளிட்டவற்றைப் பிடித்துக் கொண்டு நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதைப்பார்த்த அருகாமையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் இவர்களை மீட்டு மண்டபம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் அழைத்து வந்தனர்.

    இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு: ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலையில் 482 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு, நெடுந்தீவு, தனுஷ்கோடி, தலைமன்னார் பகுதிகளில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். தனுஷ்கோடி கடல் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அப்பகுதியில் மீன்பிடித்த மாரிபிச்சை, சகாயம், ராமன் ஆகியோரின் படகு உள்பட 15 க்கும் மேற்பட்ட படகுகளை விரட்டியடித்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai