சுடச்சுட

  

  போலிஉரங்களை வாங்கி ஏமாற வேண்டாம்: விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அறிவுரை

  By ராமநாதபுரம்  |   Published on : 11th July 2016 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போலியான உரங்களை வாங்கி ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறு விற்பனை செய்யப்பட்டாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக தெரிவிக்குமாறும் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அரிவாசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  அவரது செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பருவ விதைப்பிற்கு தேவைப்படும் அடியுரங்கள் தேவையான அளவு தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும், தனியார் உர நிறுவனங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

  மாவட்டத்தில் யூரியா 1158 மெ.டன், டி.ஏ.பி.628 மெ.டன், பொட்டாஷ் 48 மெ.டன், என்.பி.கே.கலப்பு உரங்கள் 412 மெ.டன்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று தனியார் உர நிறுவனங்களிலும்,அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு நெல் விதைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

  தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் போலி உரங்கள் விற்பனை செய்யப்பட்டு அவற்றை விற்பனை செய்த உரிமம் பெறாத விற்பனையாளர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகள் போலி உரங்களை வாங்கி ஏமாற வேண்டாம். மேலும் உரங்களை வாங்கும் போது பில் கேட்டுப் பெற வேண்டும்.

  போலி உரங்கள் விற்பனை செய்யப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டாலோ தரக்கட்டுப்பாட்டு பிரிவு வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணையா-9442049291 அல்லது வேளாண்மை அலுவலர் பி.ஜி. நாகராஜன் 9443094193 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

  அனைத்து வட்டாரங்களிலும தரமான உரங்கள் சரியான நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai