முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்
By முதுகுளத்தூர் | Published on : 11th July 2016 07:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
முதுகுளத்தூர் ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் 40-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
முதுகுளத்தூர், எம்.தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களின் காவல் தெய்வமான ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வைகை ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதலுடன் தொடங்கியது. காலை 6 மணியளவில் கோயிலின் முன்பு யாகம் வளர்க்கப்பட்டது. 9 மணியளவில் கோமாதா பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றன.
முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்குவதற்கும், அக்னிச்சட்டி, மாவிளக்கு, பால்குடம் எடுப்பதற்கும் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். விழா நாள்களில் பட்டிமன்றம், நாடகம், 1008 திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜூலை 21 வரை திருவிழா நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை செல்வி அம்மன் கோயில் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.