சுடச்சுட

  

  ராஜீவ் கொலைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: தமிழ் அமைப்பு பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல்

  By பரமக்குடி  |   Published on : 11th July 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழர் விடுதலை இயக்க தலைவர் தியாகு பேசினார்.

    பரமக்குடி பாரதிநகரில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆ.வீராச்சாமி தலைமை வகித்தார்.

     வழக்குரைஞர்கள் க.முத்துக்கண்ணன், சி.பசுமலை ஆகியோர் ராஜீவ் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இருப்பது குறித்து விளக்கினர்.

     தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு பேசும்போது, மாநில அரசின் மன்னிப்பு அதிகாரமும், இந்திய அரசின் மன்னிப்பு அதிகாரமும் சம அதிகாரம் உடையவை. இதுபோன்ற சட்டவரம்புகளை வைத்து தமிழக அரசு 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

     முன்னதாக வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மு.மதுரைவீரன், தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் ஆர்.இளங்கோ, விடுதலை சிறுத்தைகள் செயலர் வை.சிவா, கடலோர மக்கள் பொறுப்பாளர் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சமூக ஆர்வலர் சை.செளந்திரபாண்டியன் வரவேற்றார். சதாம் ரசூல் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai