சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா

  By ராமநாதபுரம்  |   Published on : 11th July 2016 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் ஜெனார்த்தனன் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை விடியலைத் தேடி என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

  விழாவுக்கு, நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் ஆர். வாசு தலைமை வகித்தார். தமிழ்ச் சங்கப் பொருளாளர் க. மங்கள சுந்தரமூர்த்தி, கம்பன் கழக பொதுச் செயலர் புலவர் அ. மாயழகு, பாரதி ஐ.ஏ.எஸ். அகாதெமி பயிற்சி மைய நிர்வாகி மோகனபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலாசிரியரும் கவிஞருமான கூ. பழனியாண்டி வரவேற்றுப் பேசினார். ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மை. அப்துல்சலாம் விடியலைத் தேடி என்ற கவிதை நூலை வெளியிட, அதன் முதல் பிரதியை ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகர் பெற்றுக்கொண்டார்.

  விழாவில், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்ச் சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற பலரும் கவிதை நூலை ஆய்வு செய்து, அதிலுள்ள கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சா. கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai