சுடச்சுட

    

    ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஸ்ரீசீதா கல்யாணம்

    By ராமநாதபுரம்  |   Published on : 11th July 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் அருள்மிகு கோதண்டராமசுவாமி திருக்கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு கோதண்டராம சுவாமிக்கும் சீதா தேவிக்கும் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

        ராமநாதபுரம் அருள்மிகு கோதண்டராமசுவாமி திருக்கோயில் ஆனித் திருவிழா கடந்த 5 ஆம் தேதி காப்புக்கட்டு மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனத்தில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீகோதண்டராமசுவாமிக்கும், அருள்மிகு சீதா தேவிக்கும் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றல் வைபவம் மற்றும் தேங்காய் உருட்டல் ஆகியனவும் நடந்தன. விழாவில் ராமநாதபுரம் சமஸ்தான திவான் வி.மகேந்திரன், செயல் அலுவலர் சி.சுவாமிநாதன், கண்ணன்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரும் புதன்கிழமை(ஜூலை 13) தேரோட்டம் நடக்கிறது.  14 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.   விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் ஜி.கண்ணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai